புதன், 14 அக்டோபர், 2009

வாழ்த்துக்கள் Obama

நீங்கள் நோபெல் பரிசு வாங்கியதற்கு வாழ்த்துக்கள் ஒபாமா.

என்னுடைய கேள்வி.. இதற்கு நீங்கள் தகுதி ஆனவர் தானா என்பதே. பதவி எஅற்றது ஜனவரி ௨0 தேதி. நோபெல் பரிசின் சிபாரிசு காலகெடு பெப்ரவரி 1. பத்து நாளில் அப்பிடி என்ன உலக சமாதானத்துக்காக செய்தீர்கள்? இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாக தெரியவில்லை? பரிசு கிடைத்தது உங்களுக்கு புதிய செய்தி போல கதை வேறு. உங்கள்ளுக்கு அறிவிக்காமல் உலகத்திற்கு அறிவிக்க அவர்கள் என்ன ஆஸ்கார் அவர்டா கொடுகிறார்கள்? யார் காதில் பூ சுற்ற வேண்டும்? நீங்கள் வெறும் பேச்சாளர் காரியத்தில் எதுவும் செய்ய மாட்டிர்கள் என்ற என் கணிப்பை இந்த ஒன்பது மாதத்தில் பல தடவை மெய்ப்பித்து இருக்கிறீர்கள். இது உங்கள் சாதனைக்கா அல்ல நிறதுக்கான பரிசா? உங்களை விட இந்த வருடம் தகுதியானவர் உங்கள் கண்ணில் பட வில்லையா? உங்களுக்கு உண்மையில் மனசு என்று ஒன்று இருந்தால் பரிசை திருப்பி கொடுத்துவிட்டு பதவியை விட்டு விலகும் முன் சமாதான சாதனை செய்துவிட்டு வாங்கிகொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் தகுதி பெறமுடியும்.

நன்றி : நோபெல் பரிசு குழுவிற்கு. உங்களை விட யாராலும் ஒரே நாளில் இப்படி ஒபமாவின் முகத்திரையை எடுத்திருக்க முடியாது.

என் பின் குறிப்பு: 'கலை உலகப் படைப்பாளி' தனக்கு தானே திட்டத்தின் படி தனக்கே வழந்கி கொண்ட அண்ணா விருது, 'உளியின் ஓசை' சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது போன்றவற்றிற்கும் நோபல் பரிசுக்கும் இப்போது பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: