இந்த கேள்வி என் மனதில் பல வருடங்களாக இருக்கு. ஆனால் இதை வெளி இடும் சந்தர்பம் வந்தது இல்லை. சில நாட்களுக்கு முன் சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. அதன் வெளிப்பாடே இந்த பதிவு. இதில் நான் எந்த நிலைப்பாடும் எடுக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்.
முல்லை இன் பதிவு
சகோதரி.. உங்கள் பதிவை நான் விமர்சிக்கவில்லை. அதில் தென்படும் சமூக மாற்றத்தை மட்டுமே குறிக்க ஆசைபடுகிறேன். இந்த பதிவுகளில் எனக்கு பட்டதெல்லாம் தாயின் மனக்குமுறல் மட்டுமே. தன் குழந்தையை தன்னால் நேரடியாக வளர்க்க இயலாமை தெரிகிறது. உங்கள் நேரமின்மை உங்கள் குழந்தைகளை பாதிக்காமல் நீங்கள் பார்த்துக்கொள்வது புரிகிறது. அதற்கு என் பாராட்டுகள். தன் குழந்தைக்கு ஒரு நல்ல செவிலி தாய்க்கான தேடலும் தெரிகிறது. அதற்கு காரணம் நமது தற்போதிய வாழ்க்கை நிலையும், தரமும், எதிர்பார்பும் தான். அது தவறல்ல ஆனால் அது நம்முடைய சந்ததியினரை பாதிக்க கூடாது என்பதே என் கவலை. அதே நேரம் நான் செவிலி தாய் களை குறை சொல்ல வில்லை. ஆனால் அவர்கள் தாய் அல்ல. கட்டாயத்துக்காக தாய் பொறுப்பில் இருப்பவர்கள். அவர்களால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கட்டும் அக்கறை காட்ட முடியாது. அவர்கள் செய்யகுடியது உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது மட்டுமே. வளர்ச்சி அவர்கள் பொறுப்பு அல்ல.
பொறுப்பு தந்தைக்கு இல்லையா என்ற கேள்வி வேண்டாம். இது தாய்க்கு மட்டுமே ஆன சுட்டி அல்ல. பெற்றவர்கள் இருவர்க்கும் ஆன பொது சுட்டி. அம்மாவால் நேரம் ஒதுக்க முடியாத பொழுது, அப்பா அம்மாவாக வேண்டும். செவிலி தாய், தாயாக முடியாது.
இது யாரையும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதில்லை. இது என் மனசில பட்டது....