செவ்வாய், 8 செப்டம்பர், 2009

Azhagiri இப்போ Alagiri

மாமியார் உடைத்தால் மண் குடம்
மருமகள் உடைத்தால் பொன்குடம்

பின்வரும் செய்தி கேட்டு உங்களுக்கு இந்த பழமொழி நினைவு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

இந்து பண்டிகை கொண்டாடுவது மூடத்தனம் ஆனால் ரமலான் நோன்பு கஞ்சி குடிப்பது நல்லது என்று ஒரு பெரியவர் சில காலங்களுக்கு முன் சொன்னார். அவர் தான் ஐயப்பன் மாலை போடுவதையும் கேலி செய்தார். இன்று அவர் மஞ்சள் துண்டு இல்லாமல் எங்கும் காட்சி கொடுப்பது இல்லை. இதை யாராவது அவரிடம் கேட்க முடியுமா அல்லது கேட்டிருகிரார்களா அல்லது கேட்கத்தான் முடியுமா? கேட்டால் அவன் தமிழ் துரோகி ஆகிவிட மாட்டாநா ? பிறர் நம்பிக்கையை கேலி சையும் உரிமை சிலருக்கு மட்டுமே உண்டா? கேள்வி கேட்டால் அவரிடம் இருந்து என்ன பதில் வரும்? உண்மை காரணம் மட்டும் கண்டிப்பாக வராது.

இதோ அவரது வாரிசு. தனது நம்பிக்கைக்காக செய்த மாற்றத்தை அடுத்தவனின் இயலாமையாக காட்டும் செயல். இந்த செய்தியை ஏன் யாரும் விமர்சிக்க ( விடுங்கள் முதுகு எலும்பு இல்லாதவர்கள் ) வில்லை ? அட சொல்ல கூட இல்லை? வோட்டுக்கு வாங்கிய 500 ருபாய்கு இவ்வளவு நன்றியா ? அப்பா போல் மகன்.


இந்த நாடும் மக்களும் நாசமாய் போகட்டும் என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

இது என் மனசில பட்டது....

கருத்துகள் இல்லை: